The Governor's Projects in the Year of Pride in Service
1. Free Eye Examination for School Students
Students enrolled in government and government-aided schools often come from middle-class or economically disadvantaged backgrounds. Studies indicate that approximately 10% of these students experience vision impairments, which frequently go unnoticed due to financial constraints or lack of awareness among their families.
1. பள்ளி மாணவர்களுக்கு இலவச கண் பரிசோதனை
அரசு மற்றும் அரசு உதவிபெற்ற பள்ளிகளில் கல்வி பயிலும் மாணவர்கள் பெரும்பாலும் நடுத்தர மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். சுமார் 10% மாணவர்களுக்கு பார்வை குறைபாடு உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன, ஆனால் குடும்ப நிதி நிலைமையால் இது கவனிக்கப்படுவதில்லை.
2. Breast and Cervical Cancer Awareness Camp for Women
Breast and cervical cancer cases are increasing among women in our country, primarily due to a lack of awareness. This project aims to conduct awareness camps with expert doctors to educate women about these diseases, facilitate early detection, and provide opportunities for treatment.
2. பெண்களுக்கான மார்பக மற்றும் கர்ப்பக புற்றுநோய் விழிப்புணர்வு முகாம்
நம் நாட்டில் பெண்களில் மார்பக மற்றும் கர்ப்பக புற்றுநோய் அதிகரித்து வருகிறது, இதற்கான முக்கிய காரணம் அதைப் பற்றிய விழிப்புணர்வு பற்றிய பற்றாக்குறையாகும். இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம், பெண்களுக்கு தேவையான இடங்களில் மருத்துவர்களை கொண்டு விழிப்புணர்வு முகாம்களை நடத்தி, அவர்கள் இந்த நோய்கள் பற்றிய விழிப்புணர்வை பெற, சரியான பரிசோதனைகளை மேற்கொள்ளவும், தேவைப்பட்டால் சிகிச்சை பெறவும் வாய்ப்பளிக்கின்றது.
3. Arima Ayiram
The leadership training building located on Yercaud Hill in our district is renowned among Arima members. Currently, it has a capacity of 60 individuals, but further development is required to accommodate more people. The Governor has introduced the "Arima One Thousand" initiative, requesting each Arima in our district to contribute Rs. 1000/- to support the expansion of this training facility.
3. அரிமா ஆயிரம் திட்டம்
எங்கள் மாவட்டத்தின் ஏற்காடு மலை பகுதியில் அமைந்துள்ள தலைமைத்துவ பயிற்சி மையம் அரிமா உலகில் புகழ்பெற்ற ஒன்றாகும். தற்போது இதில் 60 பேர் மட்டுமே தங்கும் வசதி உள்ளது, மேலும் அதிகம் பேர் தங்க வசதியை மேம்படுத்த தேவையான உதவிகளை செய்ய வேண்டும். இதற்காக, ஆளுநர் "அரிமா ஆயிரம்" திட்டத்தை அறிமுகப்படுத்தி, ஒவ்வொரு அரிமாவும் ரூ.1000/- நிதியுதவி வழங்குமாறு கோருகிறார்.